Thursday, July 5, 2012

செல் அமைப்பு: CELL WALL - STRUCTURE - செல் சுவர் அமைப்பு விரிவான பார்வை - 3

மக்களே...!!!

செல் சுவரை பத்தின தகவல்களை பத்தி எழுத எழுத நீளமா வந்திட்டே இருக்கறதால இந்த பதிவுகளை சில பாகங்களா எழுத வேண்டியதா ஆயிடுச்சி. இருந்தும், நான் இன்னும் முழுமையா சொல்லி முடிக்கல. பதிவோட நீளம் அனுமதிக்காததாலும் அதுக்கான விளக்க படங்கள் நிறைய போட வேண்டி இருக்கறதாலும் இப்படி எல்லாம் பண்ண வேண்டி இருக்கு. இப்போ பதிவுக்கு போகலாம்.

BACTERIAL CELL WALL - பேக்டீரியாவின் செல் சுவர்

பேக்டீரியா... நமக்கு நல்ல தெரிஞ்சது தான். ஒரு செல் உயிரினம். செல் சுவர் கொண்டது. பூமியில உருவான உயிரினங்கள் தாவரம் விலங்குன்னு வகைப்படுத்தி பிரியறதுக்கு முன்னாடி, பூஞ்சைகளுக்கும் முன்னாடி இருந்த உயிரினம். அப்போ இதுல இருக்கிற செல் சுவர் எப்படி இருக்கும்? பொதுவா சொல்லனும்ன்னா, பேக்டீரியாவோட செல் சுவர் பெப்டிடோ கிளைக்கன் அப்படிங்கற கார்போஹைட்ரேட்டை அடிப்படையா கொண்ட வேதி பொருளால ஆனது. முன்னாடி பார்த்த குளுக்கோஸமைன் மாதிரி, இந்த பெப்டிடோ கிளைக்கன் N - அசிட்டைல் குளுக்கோஸமைன் மற்றும் N - அசிட்டைல் மியூராமிக் ஆசிட்டால் ஆனது. (N-ACETYL GLUCOSAMINE AND N-ACETYL MURAMIC ACID). இந்த ரெண்டு வேதி பொருளுக்குமே, அடிப்படை வேதி பொருள் குளுகோஸ் தான்.  ஆனா, கூட சில வேதி குரூப்களை அதிகப்படியா கொண்டது. அவ்ளோதான். இந்த ரெண்டு வேதி பொருளும் மாறி மாறி இணைஞ்சி, நீளமான செயினா உருவாகும். அப்படி உருவான நீளமான செயின்கள், குறுக்கு வாக்குல சிறு சிறு புரோட்டீன் மூலக்கூறுகளால இணைக்கப்படும். தறியில துணி நெய்யிற மாதிரி. இது பேக்டீரியாவோட பொதுவான செல் சுவர் அமைப்பு. 


அதே சமயம், பேக்டீரியாவுல இருக்கிற ரெண்டு முக்கியமான பிரிவுகளை பத்தி நாம கண்டிப்பா தெரிஞ்சிக்கணும். அதாவது ரெண்டு முக்கியமான வகைப்பாடு. ஒன்னு, கிராம் நெகடிவ் பேக்டீரியா - GRAM NEGATIVE BACTERIA , இன்னொன்னு, கிராம் பாசிடிவ் பேக்டீரியா - GRAM POSITIVE BACTERIA .  இதுல கிராம் நெகடிவ் பேக்டீரியா அப்படின்னா என்ன...? ஒரு உயிரினம் அதாவது ஒரு செல் உயிரினம் பேக்டீரியா தானா அப்படின்னு கண்டுபிடிக்க பரிசோதனை கூடத்துல சில பரிசோதனைகள் செய்வாங்க. அதுல முதல் பரிசோதனையும்,  அடிப்படை ஒரு பரிசோதனையுமா இருக்கறது GRAM STAINING - கிராம் ஸ்டெயினிங் - கிராம் நிறமிடுதல். இந்த நிறமிடுதல் அப்படிங்கற வார்த்தை GOOGLE TRANSLATOR-ல இருந்து எடுத்தேன். அதாவது, பேக்டீரியவை கலர் பண்ணி பார்ப்பாங்க. அதென்ன, கிராம் நிறமிடுதல் அப்படினா, இந்த கலர் பண்ணி பார்க்கிற முறைய கண்டு பிடிச்சவர் ஹான்ஸ் கிறிஸ்டியன் கிராம் - HANS CHRISTIAN GRAM அப்படிங்கறவரு. ஸோ, அவரோட பேரால இது கிராம் நிறமிடுதல் அப்படின்னு சொல்லபடுது.   ஒவ்வொரு ஒரு செல் உயிரினத்துக்கும், தனி தனி கலர் பண்ணி பார்க்கிற முறை இருக்கு. ஆனா, அதையெல்லாம் பிறகு பார்க்கலாம்.

ஓகே... நம்ம விசயத்துக்கு வருவோம். கிராம் நிறமிடுதல் முறையில முதல்ல கிறிஸ்டல் வயலெட் - CRYSTAL VIOLET அப்படிங்கற ஊதா கலர் - PURPLE COLOR  வேதி பொருளை போடுவாங்க. இந்த வேதி பொருள் ரெண்டு வகை பேக்டீரியாவோட செல் சுவரையும் ஊடுருவி நல்லா ஒட்டிக்கும். இப்போ பேக்டீரியா ஊதாவா மாறிடும். அப்புறம் அயோடின் - IODINE அப்படிங்கற வேதி பொருளை போடுவாங்க. இது இந்த ஊதா கலரோட சேர்ந்து கலர் நல்லா ஓட்டிக்க உதவி செய்யும். அடுத்தது ஆல்கஹால் வெச்சி இந்த ஊதா கலரை கழுவுவாங்க. கிராம் நெகடிவ் பேக்டீரியாவா இருந்தா இந்த ஊதா கலர் போயிடும். பாசிடிவ் பேக்டீரியா ஊதா கலரோட அப்படியே இருக்கும். அடுத்து, சேபரோனின் - SAFRANIN அப்படிங்கற இளம் சிவப்பு கலர் - PINK COLOR  வேதி பொருளை போடுவாங்க. ஊதா கலரை இழந்துட்ட நெகடிவ் பேக்டீரியா இந்த இளம் சிவப்பு கலரை எடுத்துக்கிட்டு இளம் சிவப்பா மாறிடும். ஏற்கனவே ஊதாவா இருக்கும் கிராம் பாசிடிவ் பேக்டீரியா இந்த இளம் சிவப்பு கலரை ஏத்துக்காது. பழைய ஊதா கலரோட அப்படியே இருக்கும்.

 

இதுல இன்னும் ஒரு விஷயம், இந்த பரிசோதனை பேக்டீரியாவுக்கு மட்டும் தான் வேலை செய்யும். பேக்டீரியா மட்டும் தான் இந்த ரெண்டு கலர்ல ஒன்னை எடுத்துக்கும். வேறு ஒரு செல் உயிரினங்கள்ல  இந்த பரிசோதனை செய்தா எந்த பயனும் இருக்காது. அதனால தான் இந்த முறை பேக்டீரியாவை கண்டுபிடிக்க ஒரு முக்கியமான பரிசோதனையா இருக்கு. இந்த நிறமிடுதல் முறை பேக்டீரியாவோட வெளிப்புற வடிவமைப்பை பார்க்கவும் உதவும். இங்க சும்மா சிம்பிளா தான் சொல்லியிருக்கேன். இதை பத்தி ஒரு தனி பதிவுல இன்னும் விரிவா பார்க்கலாம்.   

ஓகே... இப்போ நாம நம்ம மெயின் மேட்டருக்கு வருவோம். இப்படி பேக்டீரியாவா இருந்தாலும் எப்படி ஒரு வகை பேக்டீரியாவோட செல் சுவர் மட்டும் கலரை எடுத்துக்க முடியுது...? ஏன் இன்னொரு வகை பேக்டீரியாவால கலரை எடுத்துக்க முடியல...? ஏன்னா, அதனோட செல் சுவர் அமைப்பு வேற வேற. இளம் சிவப்பு வேதி பொருளோட வினை புரிஞ்சி அந்த கலரை தக்க வச்சிக்கிற தன்மை கிராம் நெகடிவ் வகை பேக்டீரியாவோட செல் சுவருக்கு இல்லை. அப்படி என்ன வித்தியாசம் இந்த ரெண்டுவகை பேக்டீரியாவோட செல் சுவர்ல...? இது தான் இப்போ பார்க்க போறோம்...

GRAM POSITIVE BACTERIA - CELL WALL STRUCTURE - கிராம் பாசிடிவ் பேக்டீரியா - செல் சுவர் அமைப்பு

கிராம் பாசிடிவ் பேக்டீரியா வோட செல் சுவர் அமைப்பு ரொம்ப சிம்பிளானது. செல் சுவரை கொண்ட மத்த உயிரினங்கள் மாதிரி, ஒரு செல் சவ்வு அதுக்கு வெளிப்புறமா செல் சுவர் இருக்கு. இந்த செல் சுவர் பெப்டிடோ கிளைக்கன் அப்படிங்கற குளுக்கோஸை அடிப்படையா கொண்ட N - அசிட்டைல் குளுக்கோஸமைன் மற்றும் N - அசிட்டைல் மியூராமிக் ஆசிட்டால் ஆனது. (N-ACETYL GLUCOSAMINE AND N-ACETYL MURAMIC ACID). செல் சவ்வுக்கு மேல, கிட்டத்தட்ட மூன்று படலங்களா, வெளிப்புறமா இந்த பெப்டிடோ கிளைக்கன் படலம் சாதாரணமா வெளிய தெரிஞ்சிட்டு இருக்கிறதனால ஊதா கலர் போடும்போது ஈசியா அந்த கலரை எடுத்துக்கும். நல்லா பிக்ஸ் ஆகிடும். ஆல்கஹால் வெச்சி கழுவும் போது போகாது.




கிராம் நெகடிவ் பேக்டீரியா - செல் சுவர் அமைப்பு - GRAM NEGATIVE BACTERIA - CELL WALL STRUCTURE

கிராம் நெகடிவ் பேக்டீரியாவோட செல் அமைப்பே கொஞ்சம் வித்தியாசமானது. இதுவரைக்கும் நாம பார்த்த செல்கள்ல ஒரு செல் சவ்வு தான் பார்த்திருக்கோம் இல்லையா...? ஆனா, இந்த வகை பேக்டீரியாவுல ரெண்டு செல் சவ்வு இருக்கும். அதாவது முதல்ல ஒரு செல் சவ்வு எல்லா செல்களை போல...!! அதுக்கு வெளிப்புறமா செல் சுவர்...!! இதுவும் எல்லா செல்களை போலதான். ஆனா, அதுக்கும் வெளிப்புறமா இன்னொரு ரெண்டாவது செல் சவ்வு இருக்கும். சிம்பிளா சொல்லனும்ன்னா, செல் சுவர் ரெண்டு செல் சவ்வுக்கு நடுவுல பத்திரமா இருக்கும். 

 

கிராம் நிறமிடுதல் பரிசோதனை பண்ண ஊதா கலர் போடும்போது அது வெளிப்புற செல் சவ்வுல (செல் சுவர் உள்ள இருக்கறதால கலரை எடுக்க முடியாது) நல்லா பிக்ஸ் ஆயிடும். அப்புறமா ஆல்கஹால் வெச்சி கழுவும் போது ஊதா கலரோட சேர்த்து வெளிப்புற செல் சவ்வே போயிடும். இப்போ வெளிய தெரிய ஆரம்பிக்கிற பெப்டிடோ கிளைக்கன் அடுத்ததா போடப்படர இளம் சிவப்பு கலரை தான் எடுக்க வேண்டிய சூழ்நிலை. ஸோ, ரெண்டாவதா போடப்பட்ட இளம் சிவப்பு கலர் மட்டும் எஞ்சி இருக்கும். 

கிளைக்கோ புரோட்டீன்கள் அப்படின்னும் ஒரு வகை இருக்கு. இது ஆர்க்கியே பேக்டீரியா வகை பேக்டீரியாவோட செல் சுவர்ல இருக்கும்.. இது அப்படியே பெப்டிடோ கிளைக்கன் வகையோட தலைகீழ். அதாவது நீளமான புரோட்டீன்ல சிறு சிறு கார்போஹைட்ரெட் செயின்கள் இணைஞ்ச அமைப்பு. ஆனா, பதிவு நீளமா போறதால இதை பத்தி வேற ஒரு தனி பதிவுல விளக்கமா பார்க்கலாம்.

அடுத்த பதிவுல சிந்திப்போம்...!!!

2 comments:

  1. நல்ல தகவல் பகிர்நததற்கு நன்றி




    நன்றி,
    ~ஜோ
    எங்கள் வலைத்தளத்தை (www.ezedcal.com) பயன்பாடுத்தி உங்கள் வலைப்பூவின் தலையங்கம் காலண்டரை எளிதாக நிர்வகித்து கொள்ளாலம். விருப்பமானால் உங்கள் வலைப்பூவில் அதை எளிதாக வெளியிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. Thank you for your visit here and for the comment.

      Delete