Friday, July 20, 2012

செல் அமைப்பு: ஆர்க்கியே பேக்டீரியா - ARCHAEA BACTERIA - ஒரு அறிமுகம்...!!!

மக்களே...!!!

செல் அமைப்பு பத்தின விரிவான பார்வையில, செல் சுவர் பத்தி பார்த்திட்டு இருந்தோம். இன்னும் பார்த்திட்டு இருக்கிறோம். செல் சுவரோட போன பதிவு எப்படி இருந்தது? எதுவும் சந்தேகம் இருந்தா பின்னூட்டத்துல போடுங்க. என்னால முடிஞ்சா வரைக்கும் பதில் சொல்ல முயற்சி பண்றேன். திடீர்ன்னு தான் தோணுச்சி. செல் சம்பந்தப்பட்ட வீடியோக்களை இங்க இணைக்கலாம்ன்னு. முதல் வீடியோ எப்படி இருந்தது...? நல்ல வீடியோக்கள் கிடைக்கும்போதெல்லாம் கண்டிப்பா பார்க்கலாம். 

இன்னைக்கு பதிவும் செல் சுவர் அமைப்பு பத்தின பதிவுகளோட தொடர்ச்சி தான். ஆனா கொஞ்சம் வித்தியாசமானது. செல் சுவர் பத்தின விவரங்கள்ல இன்னும் சொல்லப்படாத ஒன்னு ஆர்க்கியே பேக்டீரியாவோட செல் சுவர் அமைப்பு. ஆர்க்கியே பேக்டீரியா, பேக்டீரியான்னு சொல்லப்பட்டாலும், இது பேக்டீரியாவுல இருந்து மாறுபட்டது. பரிணாம வளர்ச்சியில, நுண்ணுயிரிகள்ல இதுக்குன்னு ஒரு தனி இடம் குடுத்திருக்காங்க.  பேக்டீரியாக்களை போல குறைந்தபட்ச மேம்படுத்தப்பட்ட செல் உறுப்புகளை கூட இதுல பார்க்க முடியாது. அதனால, முதல்ல பரிணாம வளர்ச்சி பட்டியல்ல பேக்டீரியாவோட சேர்த்து வைக்கப்பட்டு இருந்த இவை, பின்னாடி விஞ்ஞானிகளால பேக்டீரியாவுக்கும், இவைகளுக்குமான வேறுபாடுகள் கவனமா ஆராயப்பட்டு, அப்புறமா ஆர்க்கியே பேக்டீரியா அப்படின்னு ஒரு தனி பிரிவை உண்டாக்கினாங்க. இப்போ பரிணாம வளர்ச்சி பட்டியல்ல பேக்டீரியா, ஆர்க்கியே பேக்டீரியா, உயர்மட்ட செல்கள் (BACTERIA, ARCHAEA BACTERIA AND EUKARYOTE) அப்படின்னு மூணு முக்கிய பிரிவுகள் இருக்கு.


இணையத்துல ஆர்க்கியே பேக்டீரியா பத்தின தகவல்கள் தேடும்போது ஒரு விஷயம் எனக்கு புரிஞ்சது. ஆர்க்கியே பேக்டீரியா பத்தின தகவல்கள் பொதுவாவே கம்மியாதான் இருக்கு. ஆங்கிலத்துலயே, இவ்ளோ தான் இருக்குன்னா, தமிழ்ல...???? ஸோ... செல் சுவர் பத்தின விவரங்களுக்கு போறதுக்கு முன்னாடி, ஆர்க்கியே பேக்டீரியா பத்தி மொதல்ல பார்க்கலாம். அப்புறம் செல் சுவர் பத்தின விவரங்களுக்கு போகலாம். என்ன நான் சொல்றது...??? இன்னைக்கு பதிவுக்கு போகலாம். 

ஆர்க்கியே பேக்டீரியா - ARCHAEA BACTERIA - ஒரு அறிமுகம்

ஆர்க்கியே பேக்டீரியா பத்தி சொல்லும்போது அதை பத்தி சொல்ல ஒரு முக்கியமான, அதே சமயம் சுவாரஸ்யமான விஷயம் இருக்கு. இது ஒரு எக்ஸ்ட்ரீமோபைல் - EXTREMOPHILE. அதாவது, இவை எல்லாம் மிக அசாதாரணமான  கண்டிசன்ல வளரக்கூடியவை. இன்னும் கொஞ்சம் விளக்கி சொன்னா புரியும்ன்னு நெனக்கிறேன். 

ACIDOPHILE - அசிடோபைல் - இந்த வகை பேக்டீரியா pH 3 அதுக்கும் குறைவான pH ல கூட வளர முடியும். இதுல என்ன அசாதாரணமான கண்டிசன்ன்னு கேக்கறிங்களா..? ஆசிட்... இந்த சினிமால எல்லாம் முகத்துல ஊத்தற மாதிரி காமிப்பாங்களே...! அந்த ஆசிட் தான்...!!! அதனோட pH 1. ஆசிட் மேல பட்டா அந்த இடத்துல வெந்து போகும்ன்னு எல்லாருக்கும் தெரியும். நம்ம உடல் இரத்தத்தோட pH 7.4. இந்த pH  தான் சராசரியா எல்லா நுண்ணுயிர்களும் வளர தேவையான pH. ரெண்டு pH க்கும் இடையில இருக்கிற வித்தியாசம் புரியுதா...? 

ஆனா, ஆர்க்கியே பேக்டீரியாவோட இந்த வகை 1-3 pH-ல கூட சாதாரணமா வளரும். இப்போ புரியுதா இது என்ன ஒரு அசாதாரணமான கேரக்டர்ன்னு...!!! அதாவது கிட்டத்தட்ட நெருப்புல வளர்ற மாதிரி...!!!

இதே மாதிரி, அளவுக்கு அதிகமான உப்பு இருக்கிற இடம், ஏன்...? ஒரு உப்பு கட்டி இருக்குன்னு வெச்சிக்கோங்க... அந்த உப்பு கட்டிக்கு உள்ள கூட வளரும். pH ரேன்ஜ் 1-14 வரைக்கும். மிக குறைவான pH 1. அது ஆசிட். அதிக அளவு pH  14. அது ஒரு கிலோ உப்பை வெறும் 10 மில்லி தண்ணியில கரைக்கிற மாதிரி கண்டிசன். அதுகூட இல்லை. வெறும் உப்பை சாப்பிடற மாதிரி. ரெண்டு கண்டிசனும் நார்மல் கிடையாது. ஆனா இந்த வகை பேக்டீரியா ரெண்டு கண்டிசன்லயும் வளரும்.

அளவுக்கு அதிகமான உப்பு, ஆக்சிஜன் இல்லாம, 120 டிகிரி சூடான இடம் (ஆனா தண்ணி கொதிக்க 100 டிகிரி போதும்), அன்டார்டிகால குளிர் காலத்துல  இருக்கிற கிளைமேட் கிட்டத்தட்ட -70 டிகிரி. நம்ம வீட்டு பிரிட்ஜ் வெறும் +4 டிகிரி. சாதாரணமா +20க்கு கம்மியா, +37 டிகிரிக்கு மேல இருந்தாலே எதுவும் வளராது. ஆனா இந்த வகை பேக்டீரியால சில +120 டிகிரிலயும் வளரும். ஒரு சில -70 டிகிரியிலயும் வளரும். இன்னும் எவ்வளவோ இருக்கு. இப்போதைக்கு இது போதும். இப்போ புரிஞ்சிருக்கும் ஆர்க்கியே பேக்டீரியா எப்படின்னு.

இதுங்களால எப்படி இந்த மாதிரி அசாதாரனமா இருக்க முடியிதுன்னு யோசிச்சப்போ, எனக்கு தோணினது ஒன்னே ஒன்னு தான். ஆரம்ப கால பூமியோட கண்டிசன் எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சி பாருங்க. அதிக குளிர். அதிக சூடு. அளவுக்கு அதிகமா கரிம வேதிபொருட்கள் நிறைஞ்ச கடல் தண்ணீர். மிக மிக அசாதாரணமான சூழல். இந்த சூழல்ல வந்த உயிரினங்கள் இவை. ஸோ, அசாதாரணமா இருக்கிறதுல ஆச்சர்யம் இல்லை. ஆனா பார்க்கறதுக்கு, அதாவது பார்வைக்கு ஆர்க்கியே பேக்டீரியாவுக்கும், பேக்டீரியாவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதனால பார்த்து எல்லாம் பேக்டீரியாவா, ஆர்க்கியே பேக்டீரியாவான்னு சொல்றது ரொம்ப கஷ்டம்.



அப்போ வளர்ற சூழல் தவிர எப்படித்தான் பேக்டீரியாவையும் ஆர்க்கியே பேக்டீரியாவையும் வேறுபடுத்தறது...? அதுக்கு சில விஷயங்கள் இருக்கு. கீழ பார்க்கலாம்.

1. செல் சுவர் - பேக்டீரியாவோட செல் சுவர் பத்தி போன பதிவுல தான் பார்த்தோம். பேக்டீரியாவுக்கன்னு ஒரு குறிப்பிட்ட, இப்படிதான்னு வரையறுக்கப்பட்ட அமைப்போட செல் சுவர் கொண்டது. பெப்டிடோ கிலைக்கனால் ஆனது. ஆனா, ஆர்க்கியே பேக்டீரியாவோட செல் சுவருக்குன்னு ஒரு குறிப்பிட்ட அமைப்பு எல்லாம் கிடையாது.  முக்கியமா பெப்டிடோ கிலைக்கன் எல்லாம் இதுல கிடையாது.

2. செல் சவ்வு - பேக்டீரியாவோட செல் சவ்வு கொழுப்பு இரட்டை படல அமைப்பு கொண்டது. ஆர்க்கியே பேக்டீரியாவோட செல் சவ்வு பார்க்க தான் இரட்டை படலம் மாதிரி இருக்கும். ஆனா இரட்டை படலம் கிடையாது. 

3. செல் உறுப்புகள் - சைஸ் ஒன்னு தான் அப்படின்னாலும், அமைப்பு வேற மாதிரி இருக்கிற ரைபோசோம் - RIBOSOME , RNA பாலிமரேஸ் - RNA POLYMERASE என்ஸைம் எல்லாம் வேற மாதிரி இருக்கும். 

4. வேதி வினைகள் - வேதி வினைகள் அப்படின்னா, நாம சாப்பிடற சாப்பாடு ஜீரணம் ஆகி, முழுமையா எரிக்கப்பட்டு சக்தியா மாற்றப்படர வரைக்கும் கிட்டத்தட்ட 30-50 வகையான வேதி வினைகளுக்கு உட்படனும். இந்த வேதி வினைகள் எல்லாம் ஆர்க்கியே பேக்டீரியாவுல  வேற மாதிரி இருக்கும். 

உதாரணம் - பேக்டீரியாவுல மட்டும் இல்லை, நம்மல மாதிரி உயர்மட்ட செல்கள்லயும் நாம சாப்பிடற குளுகோஸ் ஆக்சிஜன் முன்னிலையில எரிக்கப்பட்டு சக்தியா மாற்றப்படும். அதுக்கு GLYCOLYSIS - கிலைக்காலிசிஸ், TCA CYCLE - டி.சி.எ சைக்கிள் அல்லது KREB'S CYCLE - கிரப்'ஸ் சைக்கிள் அல்லது சிட்ரிக் ஆசிட் சைக்கிள் - CITRIC ACID CYCLE மற்றும் எலக்ட்ரான் டிரான்ஸ்போர்ட் செயின் - ELECTRON TRANSPORT CHAIN இந்த மூணு முக்கிய CHEMICAL PATHWAY (இதை எப்படி தமிழ் படுத்தறதுன்னு தெரியல) நடக்கணும். ஒவ்வொரு PATH WAY -லயும் கிட்டத்தட்ட 10 வேதி வினைகள் இருக்கு. இதன் மூலமாதான் குளுக்கோஸ் படிப்படியா சக்தியா மாற்றப்படும். ஆனா ஆர்க்கியே பேக்டீரியாவுல இதெல்லாம் முறையா நடக்கறது இல்லை.

5. போட்டோ சிந்தசிஸ் - PHOTOSYSNTHESIS - ஆர்க்கியே பேக்டீரியாவுல  எல்லாமே வித்தியாசம் தான் போல. PHOTOSYNTHESIS அப்படின்னா சூரிய வெளிச்சத்தை உபயோகப்படுத்தி குளுக்கோஸ், அதன் மூலமா ATP தயாரிக்கறது. பேக்டீரியா, தாவரங்கள் அப்படின்னு எல்லா செல்கள்லயும் இது நடக்கும். இதுக்கு குளோரோபில் - CHLOROPHILL அப்படிங்கற பச்சை கலர் நிறமி தேவைப்படும். இந்த நிறமி தான் சூரிய வெளிச்சத்தை கிரகிச்சி  செல்லுக்கு தரும். ஆர்க்கியே பேக்டீரியாவிலயும் இது நடக்கும். ஆனா குளோரோபில் இல்லாமையே நடக்கும்.

6. அதேமாதிரி, ஆர்க்கியே பேக்டீரியாவோட ஒரு வகை ANAEROBIC- அன்-ஏரோபிக். அதாவது இந்த வகை செல்கள் ஆக்சிஜன் இல்லாமையே வளரும். அதனோட எந்த வேதி வினைகளுக்கும் ஆக்சிஜன் தேவை இல்லை.

ஆர்க்கியே பேக்டீரியாவுக்கு அறிமுகம் போதும்ன்னு நெனக்கிறேன். மத்தபடி பார்த்தா அமைப்பு, வெளிப்புற அமைப்பு, இனப்பெருக்கம் எல்லாமே சாதாரண பேக்டீரியாவுக்கும் ஆர்க்கியே பேக்டீரியாவுக்கும் எந்த விதமான வேறுபாடும் கிடையாது. விளக்க படங்கள் எதுவும் இப்போ போடல. ஆனா செல் சுவர் அமைப்பு எழுதும் போது விளக்க படங்கள் போடறேன். மேல சொன்ன விவரங்களை விளக்கமா பின்னாடி பார்க்கலாம். 
அடுத்த பதிவுல சிந்திப்போம்.

1 comment:

  1. உங்களை பாரட்ட வார்தைகளே இல்லை

    ReplyDelete