Saturday, May 12, 2012

அமினோ அமிலங்கள் - ஒரு சிறு அறிமுகம்...!!!

மக்களே...!!!

புரோட்டீன் பத்தின நம்மளோட போன பதிவுல அமினோ அமிலங்களோட கட்டமைப்பு பத்தி ஒரு விளக்க படம் போட நெனச்சிருந்தேன். ஆனா, அதென்னவோ, திடீர்ன்னு டிராப்ட்ல என்னவோ பிரச்சனையாகி இந்த படத்தை போட முடியல...இங்க அதை பத்தி பார்க்கலாம்ன்னு நெனக்கிறேன்...
இப்போ அமினோ அமிலங்களோட அடிப்படை கட்டமைப்புல, நடுவில இருக்கிற கார்பன் கூட, ஒரு ஹைட்ரஜன் (H) மூலக்கூறு, ஒரு ஆசிட் (-COO - அல்லது -COOH ) மூலக்கூறு மற்றும் ஒரு அமினோ (-NH2 OR -NH3 +) மூலக்கூறு  இந்த மூணும் இணைஞ்சிருக்கிற அமைப்பை  இருபது அமினோ அமிலங்கள் எல்லாத்துலயும்  பார்க்கலாம். ஆனா இன்னும் ஒரு வேதி மூலக்கூறு மட்டும் ஒவ்வொண்ணுலயும் வேற வேற விதமா இருக்கும். இதை நாங்க ஆங்கிலத்துல R குரூப் அல்லது FUNCTIONAL  குரூப் அல்லது VARIABLE குரூப்   அப்படின்னு சொல்லுவோம். 

இதை வேறுபாடும் பகுதி மூலக்கூறு அப்படின்னு மொழிபெயர்த்து இருக்கேன். சரியா பண்ணியிருக்கேனான்னு பார்த்து சொல்லுங்க...!!! (யாராவது தெரிஞ்சா உதவி பண்ணுங்க)


இந்த R குரூப் தான் ஒரு அமினோ அமிலத்தோட மொத்த வேதி தன்மைகளுக்கும் காரணம். இதை பொறுத்து தான் அது என்ன வேலை செய்யலாம், எதுக்கூட எல்லாம்  சேர்ந்து என்ன மாதிரி வினை புரியலாம், அதனோட கரை திறன் எல்லாத்தையும் தீர்மானிக்கிறது இந்த R குரூப் தான். உதாரணத்துக்கு ஆசிட் மூலக்கூறு இருக்கிற அமினோ அமிலம் (அஸ்பார்டேட், குளுடாமேட்) அமில தன்மை கொண்டதா இருக்கும். தண்ணீரில் கரையும். வினை புரியும் தன்மை கொண்டதா இருக்கும். அதுவே கரிம வேதி மூலக்கூறு கொண்ட சில அமினோ அமிலங்கள் (பீனைல் அலனின்)  தண்ணீரில் கரையாது.  



படத்துல நீங்க இருபது அமினோ அமிலங்களோட கட்டமைப்பை பார்க்கலாம். இந்த இருபது அமினோ அமிலங்களிலும் ஒரு எட்டு மட்டும் மிக முக்கியமானது (ESSENTIAL AMINO ACIDS ). அதாவது இந்த எட்டை தவிர மீதி இருக்கிற பன்னிரண்டும் நம்ம செல்லுலயே உற்பத்தி பண்ணப்படுகிறது. இந்த எட்டு அமினோ அமிலங்கள் மட்டும் நாம நம்ம சாப்பாடு வழியா தான் எடுத்துக்கணும். அப்படி எடுத்துக்க தவறினா, நம்ம செல்லுக்குள்ள புரோட்டீன்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டு நம்ம சிஸ்டமே ஸ்தம்பிச்சி போயிடும்.

அந்த எட்டு முக்கியமான அமினோ அமிலங்கள்

இன்னைக்கு கொஞ்சம் நேரம் கிடைச்சதை வீணாக்காம கொஞ்சம் நெறையவே எழுத முடிஞ்சது. பார்க்கலாம் அடுத்த பதிவு எப்படி முடிக்கறேன்னு...!!! அடுத்த பதிவுல சிந்திக்கலாம்.
 

No comments:

Post a Comment