Friday, May 11, 2012

நியுக்ளிக் அமிலங்கள் - ஒரு அறிமுகம்...!!!

மக்களே...!!!

நம்ம செல் அமைப்பு பத்தின விரிவான பதிவுக்கு முன்னாடி நாம தெரிஞ்சிக்க வேண்டிய சில விஷயங்கள் இன்னும் இருக்கு...அதனால செல் அமைப்பு பத்தின பதிவு இன்னும் கொஞ்சம் தள்ளி போகுது... நான் உங்களுக்கு மறுபடியும் ஞாபக படுத்த விரும்பறது என்னன்னா, நாம இப்போ பார்த்திட்டு இருக்கிற எல்லா செயல்களும் கண்ணுக்கே தெரியாத ஒரே ஒரு செல்லுல மட்டுமே நடந்திட்டு இருக்கிற செயல்கள். 

யோசிச்சி பாருங்க...!!! சில நுணுக்கமான வேலைப்பாடுகளோட ஒரு கல்லால் ஆன இல்லை மர சிற்பம் பார்த்தா எவ்வளவு வியப்பா பார்க்கறோம். ஆனா, கண்ணுக்கே தெரியாத ஒரு செல்லுக்குள்ள, இத்தனை நுணுக்கமான வேலைப்பாடிகளை இயற்கை உருவாக்கி இருக்கே...!!! இது தான் இயற்கையோட சக்தி...!!! ஓகே...இன்னைக்கு பதிவை பார்ப்போம்...

செல் கட்டமைப்போட அடிப்படை வேதி பொருட்கள் அப்படின்னு நாம சிலவற்றை பார்த்தோம். சர்க்கரை எனப்படும் கார்போஹைட்ரெட், புரோட்டீன், கொழுப்பு எனப்படும் லிப்பிட் மற்றும் நியுக்ளிக் ஆசிட் அப்படிங்கற DNA , RNA . இதுல கார்போஹைட்ரெட் பத்தி ஏற்கனவே பார்த்திட்டோம். இன்னிக்கு நியுக்ளிக் ஆசிட் பத்தி பார்க்க போறோம்.

நியுக்ளிக் ஆசிட் - NEUCLIC ACIDS - நியுக்ளிக் அமிலம்

நாம அடிக்கடி கேள்வி படர DNA , RNA ஜீன் (JENE ) எல்லாம் தான் இந்த நியுக்ளிக் அமிலங்கள். அதாவது இந்த உயிரினங்கள் அதாவது முதல் உயிரினமான ஒரு செல் உயிரினம் இந்த பூமியில உருவாகறதுக்கு முன்னாடியே இந்த பூமியில நியுக்ளிக் அமிலங்களும், புரோட்டீன்களும்  தனி தனியா உருவாகி, அது எப்படியோ ஒண்ணா சேர்ந்து, அதுல இருந்து தான் முதல் உயிரினம் தோன்றி இருக்கணும் அப்படின்னு ஒரு தியரி இருக்குது. ஆனா இந்த நியுக்ளிக் அமிலங்களையும் புரோட்டீன்களையும் ஒண்ணா சேர வெச்சது எதுன்னு தெரியல.   இதை விளக்கமா பார்க்கலாம்.

சூரியன்ல இருந்து உடைஞ்சி சிதறின ஒரு தனி நெருப்பு கோளம் தான் இந்த பூமின்னு சொல்லியிருக்காங்க, அது உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அப்படி நெருப்பு கோளமா இருந்த பூமி காலப்போக்குல படிப்படியா குளிர்ந்து, இன்னிக்கு இருக்கிற பூமியா மாறினது. அப்புறமா பல ஆயிரம் வருஷம் பெய்த 
மழை (அப்போ இருந்த பருவநிலைக்கு நிலைக்கு, பூமி முழுசுமா, சிரபுஞ்சி மாதிரி வருசத்துல எல்லா நாளும் மழை இருந்திருக்கும்) இப்போ பூமியில இருக்கிற தண்ணிக்கு ஆதாரமா இருந்திருக்கும். இப்படி பலகாலம் பூமியில வெறும் தண்ணி தான் இருந்திருக்கு. அப்போ வளிமண்டலம் அப்படிங்கற காற்று மண்டலத்திலயும், கடல் தண்ணியிலும்  வெறும் ஆக்சிஜன்(O), கார்பன்(C), நைட்ரோஜன்(N) அப்புறம் ஹைட்ரோஜன்(H) இவ்ளோ தான் இருந்திருக்கு. ஏன்னா இப்போ இருக்கிற அதனை உயிரினங்களுக்கும் (ஒரு செல் உயிர்கள்ள இருந்து மனிதன் வரை, தாவரங்களும் சேர்த்து) அடிப்படை மூலக்கூறுகள் இந்த நாலும் தான்.  வேற ஏதாவது இருந்திருந்தா அதுவும் அடிப்படை மூலக்கூறுகள்ள இருந்திருக்கும்.

அப்புறமா, அப்போ இருந்த சூரிய வெப்பம், கடல்ல இருந்த குளிரான நிலை, அடிக்கடி வந்த மழை, மின்னல் இடின்னு மாத்தி மாத்தி நடந்த நிகழ்வுகள் இந்த தனி தனியா இருந்த இந்த நாலு வேதி பொருட்களையும் தண்ணியோட உதவியோட ஒன்னு சேர்த்து சின்ன சின்ன கூட்டு மூலக்கூறுகள் அதாவது மீத்தேன்(CH4), ஈத்தேன்(CH3-CH3 (or) C2H6) இப்படி உருவாக்கி இருக்கு. (இதை ஹெரால்ட் யூரே - ஸ்டேன்லி மில்லர் அப்படிங்கற ரெண்டு விஞ்ஞானிகள் ஒரு சோதனை மூலமா நிரூபிச்சாங்க). அப்படி பல நூறு வருசங்கள் போக, இன்னமும் அதே நிகழ்வுகள் இந்த கூட்டு மூலக்கூறுகளை ஒன்னு சேர்த்து, இன்னைக்கு இருக்கிற நியுக்ளிக் அமிலங்களும் புரோட்டீன்களும் லிப்பிடுகளும் உருவாக தேவையான அமினோ அமிலங்கள், நியுக்ளியோடைடுகள் (DNA உருவாக தேவையானவை இவை) எல்லாம் உருவாச்சி. ஒரு கால கட்டத்துல, பூமியில இருந்த தண்ணி முழுசும் இந்த கூட்டு கரிம வேதி மூலக்கூறுகள் நிறைஞ்ச சூப் மாதிரி இருந்திருக்கும் அப்படின்னு விஞ்ஞானிகள் சொல்லி இருக்காங்க. மில்லர் பரிசோதனையில் இதுவும் நிரூபிக்கப்பட்டது. மில்லர் பரிசோதனை பத்தி ஒரு தனி பதிவா பாக்கலாம். 

இப்போ நியூக்ளிக் அமிலங்கள் அப்படிங்கறது, ஒரு பொதுவான பேரு. இது DNA RNA ரெண்டையும் குறிக்கும். DNA அப்படிங்கறது டீ ஆக்சி ரைபோ நியூக்ளிக் ஆசிட் (DEOXI RIBO NUCLEIC ACID) அப்படிங்கறதோட சுருக்கம். RNA அப்படிங்கறது ரைபோ நியூக்ளிக் ஆசிட் - RIBO NUCLEIC ACID அப்படிங்கறதோட சுருக்கம்.  இந்த ரெண்டுக்கும் இருக்கிற வித்தியாசம் மொத்தமே ரெண்டுதான். அதை சொல்றேன்.

இந்த DNA, RNA அப்படிங்கறது மத்த அடிப்படை மூலக்கூறுகள் மாதிரி தான் அதாவது நியுக்ளியோடைடுகள் ஒரு செயின் மாதிரி இணைந்த அமைப்பு. சரியா நோட் பண்ணியிருந்தா, நம்ம செல்லோட எந்த ஒரு அடிப்படை வேதிபொருளும் இந்த மாதிரி தான் உருவாகி இருக்கறதை பார்க்கலாம். புரோடீன்களும் அப்படி தான். அது அமினோ அமிலங்கள் செயின் மாதிரி இணைந்த அமைப்பு. DNA மற்றும் RNA மொத்தமே நாளே நாலு விதமான நியுக்ளியோடைடுகளை மட்டுமே கொண்டது. 

இந்த நியுக்ளியோடைடுகள் அப்படிங்கறது ஒரு நைட்ரஜனை அடிப்படையா கொண்ட கார மூலக்கூறு, ஐந்து கார்பன்களை அடிப்படையா கொண்ட ரைபோஸ் அப்படிங்கற ஒற்றை சர்க்கரை, அதோட ஒரு பாஸ்பேட் இணைந்த கூட்டு வேதி மூலக்கூறு.  இந்த நியுக்ளியோடைடுகள் சில புரோட்டீன்களோட உதவோயோடு, ஒன்னு சேர்ந்து புது DNA உருவாகும். இந்த கார மூலக்கூறு மொத்தம் நாலு விதம் இருக்கு. அதையும் கீழ பார்க்கலாம்.



                  THANKS TO: hyperphysics.phy-astr.gsu.edu

என்னடா... மொத்தம் நாலு விதமான கார மூலக்கூறு அப்படின்னு சொல்லிட்டு 
அஞ்சி படம் போட்டிருக்கேன்னு பார்க்கறிங்களா ...நாலு விதம் தான்... முதல்ல இருக்கிற மூணு அடினைன், குவானின் அப்புறம் சைட்டோசின் DNA, RNA ரெண்டுலயும் இருக்கும். ஆனா, யூராசில் RAN வுல மட்டும், தைமின் DNA வுல மட்டும் இருக்கும். இப்போ கணக்கு போடுங்க, நாலு தான் வரும்.



இப்போ DNA வுக்கும் RNA வுக்கும் என்ன வித்தியாசம்ன்னு பார்த்திங்கன்னா, DNA வுல இருக்கிற நான்கு நைட்ரஜன் கார மூலக்கூறுகள்ள தைமின் (THYMINE) அப்படிங்கறதுக்கு பதிலா யுராசில் (URACIL) அப்படிங்கற கார மூலக்கூறு இருக்கும். அதே மாதிரி DNA வுல இருக்கிற நியுக்ளியோடைடு அமைப்புல இருக்கிற ரைபோஸ் சர்க்கரை மூலக்கூறு அமைப்புல ஒரு ஆக்சிஜன் கம்மியா இருக்கும். RNA வுல அதிகமா இருக்கும். டீ ஆக்சி ரைபோ நியுக்ளிக் ஆசிட் (DEOXI -RIBO NUCLEIC ACID - DNA) அப்படின்னா ஆக்சிஜன் இல்லாத ரைபோஸ் நியுக்ளிக் ஆசிட் அப்படின்னு அர்த்தம். 



                                         THANKS TO: image.tutorvista.com

இப்போ எதுக்காக DNA தனியா RNA தனியா நம்ம உடம்புல இருக்கணும். அப்படின்னு ஒரு கேள்வி வருதில்லையா? அது பத்தி புரோட்டீன் உருவாகும் முறை பத்தின ஒரு விளக்கமான பதிவுல சொல்லறேன். 

மறுபடியும் பல ஆண்டுகள் இப்படி தொடர்ந்து உருவான இந்த அடிப்படி மூலக்கூறுகள் பின்னாடி தனக்குள்ள ஒன்னு சேர்ந்து புரோட்டீன்களும், நியுக்ளிக் அமிலங்களும் சின்ன சின்ன அளவுல உருவாகி, பிறகு ஒரு ஒரு செல் உயிரினம் உருவாக தேவையான அளவு உருவாகியிருக்கணும். இப்பவும் இது ஒரு வேதி பொருள் அப்படிங்கற அளவுலதான் இருந்திருக்கும். அதாவது, புரோட்டீன் ஒரு தனி வேதி பொருளாவும், இந்த DNA (முதல் முதல்ல RNA தான் வந்திருக்கணும், DNA அப்புறமாதான் வந்திருக்கணும் அப்படின்னும் ஒரு பேச்சு இருக்கு) ஒரு வேதி பொருளாகவும் தனித்தனியா தான் உருவாகி இருக்கணும். ஆனா, இந்த வேதி மூலக்கூறுகள் தக்குள்ள ஒன்னு சேர்ந்தப்போ தான் ஒரு உயிரினமா மாற ஆரம்பிச்சது. உதாரணத்துக்கு, புரோட்டீன் தனியாவும் லிபிட் தனியாவும் தான் உருவாகி இருக்கும். ஆனா செல் சவ்வு (முதல் உயிரினத்துல வெறும் செல் சவ்வும் கொஞ்சம் DNA வும் தான் ) அப்படிங்கறது லிப்பிடும் புரோட்டீனும் கலந்த கலவை. தனியா இருந்த DNA இந்த செல் சவ்வுக்குள்ள போக, அங்க ஆரம்பிச்சது இந்த பூமியோட கெட்ட காலம். அந்த ஒரு செல் தான் இன்னிக்கு மனுசனா மாறி பூமியையே அழிச்சிட்டு இருக்கு. 

இன்னும் சொல்லனும்ன்னா, DNA வும் அதை சுத்தி இருந்த செல் சவ்வும் ரொம்ப காலத்துக்கு உயிர் இல்லாத சும்மா ஒரு வேதி பொருளோட கலவையா தான் இருந்திருக்கும். ஏன்னா இப்போ இந்த நாலு வரியில நான் சொல்லிட்ட இந்த ஒவ்வொரு நிலையும் நடக்க பல ஆயிரம் வருசங்கள் எடுத்துக்கிட்ட நிகழ்வுகள். அப்புறம் தான் உயிருள்ள ஒரு உயிரினமா இயங்க ஆரம்பிச்சிருக்கும். இதுக்கு பின்னாடி அதாவது அந்த வேதி பொருளை இயங்க வெச்ச உயிர் அப்படின்னு ஒன்னு வந்ததுக்கு பின்னாடி  இருந்த சூட்சுமம் இன்னமும் யாருக்கும் பிடிபடாத ஒன்னு.
 
இது இப்போதைக்கு போதும்ன்னு நெனக்கிறேன். எதுவும் சந்தேகம் இருந்தா எனக்கு தெரியப்படுத்தினா அதை நிவர்த்தி பண்ண முயற்சிக்கிறேன். அடுத்த பதிவுல சிந்திப்போம்...!!! 



2 comments:

  1. //இந்த பூமியோட கெட்ட காலம். அந்த ஒரு செல் தான் இன்னிக்கு மனுசனா மாறி பூமியையே அழிச்சிட்டு இருக்கு.
    //

    well said sir

    ReplyDelete